இஸ்ரோவில் வேலை.. ஐடிஐ, டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்.. அப்ளை பண்ண ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோவில் காலியாக உள்ள 99 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெடிக்கல் ஆபிசர் (SD), டெக்னிக்கல் அசிஸ்டண்ட், வரைவாளர், உதவியாளர் என மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள 99 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள மனித விண்வெளி ஃபிளைட் ஆய்வு மையத்தில் (HSFC) இந்த காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

job jobs isro

பணியிடங்கள் விவரம்:
மெடிக்கல் ஆபிசர் (SD) - 04 பணியிடங்கள்
விஞ்ஞானி பொறியாளர் - 10
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் - 28
டெக்னிஷியன் - 43
வரைவாளர் - 07
உதவியாளர் - 05
என மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிபிஎஸ் முடித்து இருப்பதோடு இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியம். விஞ்ஞானி-பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு எம்.இ/ எம்.டெக் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

டெக்னிஷியன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எஸ்சி / எஸ்டி பிரிவினர் 40 வயது வரையும் ஒபிசி பிரிவினர் 38 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். கடந்த 19 ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ண பதிவு தொடங்கியது. வரும் 9.10.2024 அன்று இந்த பணியிடங்களுகு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/111106868446959785909.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும். தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.hsfc.gov.in/Recruitment இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+