இந்தோ-திபெத் படையில் வேலை.. 545 கான்ஸ்டபிள் டிரைவர் பணியிடங்கள்.. செம சான்ஸ்.. அப்ளை பண்ணுங்க
சென்னை: இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 545 கான்ஸ்டபிள் ( டிரைவர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலம்... கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாதுகாப்பு படை பிரிவாக இந்தோ- திபெத் படை உள்ளது. இந்தியா - சீனா போருக்கு பிறகு 1962 ஆம் ஆண்டு இந்தோ திபெத்திய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இந்தோ- திபெத்திய படை பிரிவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பபடுகின்றன. அந்த வகையில் தற்போது 545 கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு;

கல்வி தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது முதல் 27-வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 32 வயது வரையும், ஒபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 30 வயது வரையும் விண்ண்ப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின் பே லெவல் 3 விகிதப்படி மாதம் ரூ.21,700 - 69,100- வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, பிராக்டிகல் டெஸ்ட் & மெடிக்கல் பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: தேவையான கல்வி தகுதி, டிரைவிங் லைசன்ஸ் உள்பட தேவையான கல்வி தகுதிகளும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: https://recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப அவகாசம் தொடங்கும் நாள்: 08.10.2024, விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2024 ஆகும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தேர்வுக்கான ஷார்ட் நோட்டீஸ் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் முழு விவரங்களுடன் கூடிய தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ- திபெத் படைப்பிரிவின் இணையளதமான இதில் https://recruitment.itbpolice.nic.in/rect/index.php- தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications