ரூ 53 ஆயிரம் சம்பளத்தில் எல்ஐசியில் வேலை.. 300 இடங்கள் காலியாம்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க
சென்னை: எல்ஐசி குழுமத்தில் ரூ 53 ஆயிரம் ஊதியத்தில் 300 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மிகப் பெரிய காப்பீட்டுக் கழகமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 300 உதவி நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி பிஏ/பிஎஸ்சி / பிகாம் போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01/01/2023 அன்று 21 முதல் 30 வயதாக இருக்க வேண்டும்.

அதாவது விண்ணப்பதாரர் 02.01. 1993 ஆம் ஆண்டுக்குள் முன்பு அல்லது 01.01.2002 தேதிக்கு பிறரு பிறந்திருக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள் அல்லது பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள். இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த வேலைக்கான அடிப்படை சம்பளமாக ரூ 53,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 31.01.2023 அன்றைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை www.licindia.in என்ற முகப்பு பக்கத்தில் ஆட் தேர்வு (careers) > Recruitment of AAO (Generalist) 2023 என்ற இணைப்பு வழியே விண்ணப்பிக்கலாம். இன்னும் 10 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி தேர்வுக்கு தயாராகுங்கள். எல்ஐசியில் பணிக்கு சேருங்கள்.












Click it and Unblock the Notifications