டிகிரி முடிச்சிருந்தால் போதும்.. எல்ஐசியில் வேலை! கை நிறைய சம்பளம்.. செம சான்ஸ் விட்றாதீங்க
சென்னை: எல்ஐசியின் துணை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (LIC HFL )காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம். எல்.ஐ.சி எனப்படும் இந்த ஆயுள் காப்பீட்டு கழகம் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. மிகவும் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக எல்.ஐ.சி உள்ளது. எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது, எல்.ஐ.சியின் துணை நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 200 ஜூனியர் அஸ்சிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஆந்திரப் பிரதேசம் - 12
2. அசாம் - 05
3. சத்தீஸ்கர் - 06
4. குஜராத் - 05
5. ஹிமாச்சல பிரதேசம் - 03
6. ஜம்மு மற்றும் காஷ்மீர் - 01
7. கர்நாடகா - 38
8. மத்திய பிரதேசம் - 12
9. மகாராஷ்டிரா - 53
10. புதுச்சேரி - 01
11. சிக்கிம் - 01
12. தமிழ்நாடு - 10
13. தெலுங்கானா - 37
14. உத்தரப்பிரதேசம் - 17
15. மேற்கு வங்காளம் - 05 என மொத்தம் 200 ஜூனியர் அஸ்சிஸ்டன் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். கணினி பற்றிய அறிவு கட்டாயம். அதாவது, பள்ளி அல்லது கல்லூரியில் கணினி குறித்த பாடப்பிரிவை ஏதேனும் ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 21 வயது நிரம்பியவர்களும் 28 -வயது பூர்த்தியாகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 01.7.2024 தேதிப்படி, 02.17.1996 க்கு முன்போ 01.7.2003-க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.32,000- 35,000 வரை வழங்கப்படும். பணி செய்யும் நகரத்திற்கு ஏற்ப இந்த சம்பளத்தில் மாற்றம் இருக்கும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், நெல்லை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://www.lichousing.com/ என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை அளிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 14.08.2024 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வு நடைபெறுவதற்கு 7 முதல் 14 நாட்களுக்குள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆன்லைன் வழியாகவே தேர்வு நடைபெறும். தேர்வை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என உத்தேச தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.lichousing.com/static-assets/pdf/Detailed_Advertisement_Recruitment_of_Junior_Assistants_2024.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications