ரெடியா.. நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் பணி.. 8 ஆம் வகுப்பு தகுதி போதும்.. மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம்
சென்னை: நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அபளை செய்வதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தவர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முழு விவரங்களை இங்கே காணலாம்.

சம்பள விவரம்: அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோல், BC மற்றும் MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி மற்றும் பிற பகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆப்லைன் மூலமாக இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://nigirin.rig.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தொடர்ந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.07 .2023 பிற்பகல் 05.45 மணிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பி விட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications