நீலகிரியில் மத்திய அரசு பணி.. ரூ.81,000 வரை சம்பளம்! 10 ஆம் வகுப்பு முடிச்சவங்களும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 44 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன்னில் ராணுவ பயிற்சி பள்ளி உள்ளது. இந்த ராணுவ பயிற்சி பள்ளியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டெனோகிராபர், லோயர் டிவிஷன் கிளர்க், சிவிலியன் மோட்டோர் டிரைவர் என மொத்தம் 44 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: ஸ்டெனோகிராபர் (04 பணியிடம்), லோயர் டிவிஷன் கிளார்க் (07) டிரைவர் (05), சுகானி (01) தீ அணைப்பு வீரர் (16), சமையலர் (03), டெக்னிக்கல் அட்டண்டண்ட் - பிரிண்டிங் மெஷின் ஆபரேட்டர் (01), மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (ஆபிஸ் &டிரெயினிங்) 07 என மொத்தம் 44 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: எம்.டி.எஸ் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்ந்தால் போதுமானது. இதர பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணியிடத்திற்கு ஹெவி லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர் பணியிடத்திற்கு டைப்ரைட்டிங் திறன் தேர்வு நடத்தப்படும். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் டைப் செய்ய வேண்டும். 10 நிமிடம் தேர்வு நடத்தப்படும். அதெபோல், அந்ததந்த பணியிடங்களுக்கு தகுந்தவாறு துறை சார்ந்த தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: மல்டி டாஸ்கிங், சுகானி, டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். இதர பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: ஸடெனோகிராபர் பணியிடத்திற்கு ரூ.25,500- 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். டிவிஷன் கிளர்க் பணிக்கு ரூ. 19,9000- 63,200 சம்பளம் வழங்கப்படும். சிவிலியன் மோட்டோர் டிரைவர் பணிக்கு ரூ.19,900- 63,200 வரை வழங்கப்படும். சுகானி, ஃபயர் மேன், சமையலர் பணிகளுக்கு மாதம் ரூ.19,900-63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். டெக்னிக்கல் அட்டன்ண்டண்ட் பணிக்கு ரூ.18,000- 56,900, வரையும் மல்டி டாஸ்கிங் பணிக்கு ரூ.18,000- 56,900 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தபால் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் பதவியை தெளிவாக குறிப்பிட வேண்டும். தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை "APPLICATION FOR THE POST OF _______" and addressed to The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) - 643 231. Tamil Nadu. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23.09.2023 ஆகும்.
தேர்வு அறிவிப்பானை தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் https://www.dssc.gov.in/files/rec2023.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications