ரூ 25 ஆயிரம் டூ 35 ஆயிரம் வரை சம்பளம்.. அணுசக்தி துறை அட்டகாசமான வேலை.. இன்றே விண்ணப்பித்திடுங்கள்!
சென்னை: அணுசக்தித் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய அறிவிப்பானது ஸ்டெனோகிராபர், உயர் பிரிவு கிளார்க், ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டன்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர்கீப்பர் போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 27-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அப்ஜெக்டிங் ஸ்டெனோகிராபி திறன், விரிவான தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
ஸ்டெனோ பணிக்கு 6 இடங்களும் உயர்நிலை பிரிவு கிளார்க் பணிக்கு 5 இடங்களும் ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர்கீப்பர் பணிக்கு 63 இடங்களும் என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.
ஸ்டெனோகிராபர் கிரேடு 1 பணிக்கு 35,400 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும். ஸ்டெனோ கிரேடு 3 பணி உள்பட இதர பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ 25,500 வழங்கப்படும். ஸ்டெனோ பணிக்கு மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
உயர்நிலை பிரிவில் கிளார்க் பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் அல்லது ஜூனியர் ஸ்டோர் கீப்பர் பணிக்கு அறிவியல் அல்லது காமர்ஸ் பிரிவில் பட்டம் அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது எல்க்ட்ரானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, இஎக்ஸ்எஸ்எம், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு www.dpsdae.gov.in என்ற முகவரியை அணுகலாம்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications