நல்ல சம்பளம்.. ஓமன் நாட்டில் வேலை.. டிப்ளமோ ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வெளியிட்ட அருமையான அறிவிப்பு
சென்னை: டிப்ளமோ எலக்டிரிகல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி எலக்ட்ரீசியன் படித்தவர்கள் மற்றும் கேஸ்டிங் இன்ஸ்பெக்சன், மெஷின் ஆபரேட்டர் பணியில் அனுபவம் உள்ளவர்கள் ஓமன் நாட்டில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் வேலையில சேர வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். நல்ல சம்பளம், சில வருங்கள் பணியாற்றிவிட்டு வந்தாலே சொந்த ஊரில் வீடு வாங்கலாம். கடனை அடைக்கலாம் என்பதால் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.. அதேநேரம் துபாய், சவுதி அரேபியா, ஓமன், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் பணிபுரிய ஆசைப்படுவோர், அரசின் அங்கீகாரம் பெற்ற எஜெண்டுகளை மட்டுமே வேலைகளுக்கு நாட வேண்டும். இல்லாவிட்டால் பெரும் சிக்கல் வரலாம்.

அதேபோல் அரசே வெளிநாடுகளில் வேலை இருந்தால் அதற்கு துறை வாரியாக அறிவிப்பும் வெளியிடுகிறது. அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலையில் சேரும் போது, பணி பாதுகாப்பு, ஊதியம், வேலை நேரம், உணவு, தங்குமிடம், விசா, என எதிலும் சிக்கல் இருக்காது. அதேநேரம் பணி பாதுகாப்பு, ஊதியம், வேலை நேரம், விமான பணிச்சீட்டு, ஒர்க் பெர்மிட் விசா ஆகியவை சிறப்பான முறையில் கிடைக்கும். எனவே அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைக்கு சேருங்கள்.
அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.என். மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "ஓமன் நாட்டில் கேஸ்டிங் இன்ஸ்பெக்சன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 வருடம் பணி அனுபவமுள்ள 22 முதல் 26 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் உடை மேல் உள்வர்கள் மற்றும் 165 செமீக்கு மேல் உயரமுள்ள டிப்ளமோ எலக்டிரிகல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி எலக்ட்ரீசியன் படித்த ஆண் பணியாளர்கள், தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35,000 முதல் 39,000 மற்றும் விசா, உணவு, இருப்பிடம் விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுபவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in வலைதளம், தொலைபேசி எண்கள் (044-22505886/22502267 மற்றும் வாட்ஸ்ஆப் எண்.(9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications