மத்திய அரசு வேலை.. அலுவலக உதவியாளர் உள்பட 723 பணியிடங்கள்.. 92 ஆயிரம் வரை சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய அரசின் ராணுவ தளவாடங்கள் (ஏஓசி) மையத்தில் காலியாக உள்ள மெட்டீரியல் அசிஸ்டென்ட், ஜூனியர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 723 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 29,000 முதல் 92,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இராணுவ தளவாடங்கள் மையத்தில் (ஏஓசி) காலியாக உள்ள 723 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. மெட்டீரியல் அசிஸ்டென்ட் - 19
2. ஜூனியர் அலுவலக உதவியாளர் (JOA) - 27
3. சிவில் மோட்டார் டிரைவர் (OG) - 04
4. டெலி ஆபரேட்டர் கிரேடு-II - 14
5. ஃபயர்மேன் - 247
6. கார்பெண்டர் & ஜாய்னர் - 07
7. பெயிண்டர் & டெக்கரேட்டர் - 05
8.MTS - 11
9. டிரேட்ஸ்மேன் மேட் - 389
என மொத்தம் 723 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: மெட்ரியல் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது மெட்ரியல் மேனேஜ்மேண்டில் டிப்ளமோ அல்லது டிப்ளமோ என்ஜினியரிங் முடித்ததவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் அவசியம். அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் அவசியம். எம்.டி.எஸ், ஃபயர் மன் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிரேட்ஸ்மேன் மேட் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: மெட்ரியல் அஸ்சிஸ்டண்ட் மற்றும் சிவில் மோட்டார் டிரைவர் விண்ணப்பிக்க 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
மெட்ரியல் அஸ்சிஸ்டண்ட்: ரூ.29,200 - 92,300
எம்.டிஎஸ், டிரேட்ஸ்மேன் பணி: ரூ.18,000 - 56,900
இதர பணியிடங்களுக்கு 19,900/- to Rs. 63,200/ சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுஅவர்கள். டிரேட்ஸ்மேன் பணிக்கு உடல் திறன் தேர்வு நடைபெறும். பெயிண்டர், டெகரட்டேர் பணிக்கு வாய்மொழி தேர்வு உள்ளிட்டவை நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். https://aocrecruitment.gov.in -என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 22.12.2024. கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://aocrecruitment.gov.in/AOC-PDF/INDICATIVE-ADVERTISEMENT.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications