பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை.. 18 பணியிடங்கள்.. கல்வி தகுதி என்ன? முழு விவரம்
சென்னை: அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 18 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், லேப் உதவியாளர், ரெக்கார்ட் கிளார்க், டைபிஸ்ட் என காலியாக உள்ள 18 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: மெக்கானிக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் (01), ஸ்கில்டு அஸ்சிஸ்டண்ட் மெக்கானிக்கல் (03), லேப் உதவியாளர் (01), லேப் உதவியாளர் சிவில் (02), ஜூனியர் அசிஸ்டண்ட் (01), டைபிஸ்ட் - அலுவலகம் (01), ரெக்கார்டு கிளர்க் (01) என மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது ஜுனியர் அஸ்சிஸ்டண்ட் (ஆபிஸ்) பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ கல்வி தகுதி கொண்ட இதர பணிகளுக்கு துறை சார்ந்த கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களும் 38-வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி, பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு: ஐடிஐ கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு ரூ.19,500 (லெவல் 8) மற்றும் இதர அலவன்ஸ்களுடன் சேர்த்து விதிகளின் படி சம்பளம் கொடுக்கப்படும். ஸ்டோர் கீப்பர், ஜூனியர் அஸிசிஸ்டன்ட், டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு ரூ.19,500 முதல் சம்பளம் வழங்கப்படும். ரெக்கார்டு கிளர்க் - பணிக்கு ரூ.15,900- 58,500 (லெவல்2) படி சம்பளம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 (லெவல் 1) சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College, Palani-624 601, Dindigul District" என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 07.12.2023. அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்படாது. விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய http://www.palaniandavarpc.org.in/government_post.html கிளிக் செய்யவும். விண்ணப்ப அறிவிப்பை படிக்க
http://www.palaniandavarpc.org.in/job_application_pdf/Website%20details-41%20posts.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications