பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. மாதம் 78,000 வரை சம்பளம்.. 1025 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1025 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1025 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.

பணியிடங்கள் விவரம்: ஆபிசர் Credit : 1000 பணியிடங்கள்
மேனேஜர் Forex - 15 பணியிடங்கள்
மேலாளர் Cyber Security - 05
மூத்த மேலாளார் சைபர் செக்யூரிட்டி - 05 பணியிடங்கள்
என மொத்தம் 1025 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: ஆபிசர் - கிரெடிட் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டய கணக்காளர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்திய காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத்தில் செலவு மேலாண்மை கணக்காளர்-CMA (ICWA) பெற்றிருக்க வேண்டும். மேலாளர் (அந்நிய செலாவணி) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் எம்.பி. ஏ. அல்லது மேலாண்மை பணியில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
மேலாளர் (சைபர் பாதுகாப்பு)- பி.இ / பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல, மூத்த மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.சி.ஏ., பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர பணி அனுபவம் உள்ளிட்டவையும் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: கிரெடிட் ஆபிசர் பணிக்கு 21 வயது முதல் 28 வயதில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேனேஜர் (அந்நிய செலவாணி) மற்றும் மேனேஜர் (சைபர் பாதுகாப்பு) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான வயது வரம்பு 25 - 35. சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கான வயது வரம்பு 27 - 38 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 25. 02. 2024 கடைசி நாளாகும். மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தை படித்து தெரிந்து கொள்ளலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications