அரசு மருத்துவமனைகளில் வேலை! 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் ஜாப் இருக்கு.. ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்
சென்னை: ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, பணியிட விவரம் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நர்சு பணியிடங்கள் உள்பட மொத்தம் 28 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: மாவட்ட ஆலோசகர் (Quality), புரோகிராம் கம் நிர்வாக உதவியாளர், மனநல சமூக சேவகர், சிஸ்டம் அனலிஸ்ட்/டேட்டா மேனேஜர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், MPHW , LMMU வேன் கிளீனர், ஸ்டாப் நர்சு, டிரைவர், லேப் டெக்னிஷியன் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. MPHW- பணியிடத்திற்கு மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்படுறார்கள். செவிலியர் பணியிடத்திற்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதர பணியிடங்களுக்கு தலா ஒருவர் என மொத்தம் 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வி தகுதி: MPHW , LMMU வேன் கிளீனர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். டிரைவர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு துறை சார்ந்த கல்வி தகுதிகள் அவசியம் ஆகும். இது குறித்த முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். MPHW , LMMU வேன் கிளீனர், டிரைவர், வேன் கிளீனர் ஆகிய பணியிடங்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பணியிடத்திற்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்ப படிவங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வரும் 29.08.2023 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ/ விரைவு தபால் (Speed post) மூலமாகவே அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர் சுகாதார பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், 3-வது தளம், B பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை - 632403
சம்பளம் எவ்வளவு?: மாவட்ட ஆலோசகர் (Quality) பணியிடத்திற்கு 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். புரோகிராம் கம் நிர்வாக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. மனநல ஆலோச்கர் பணியிடத்திற்கு ரூ,18 ஆயிரம், சிஸ்டம் அனலிஸ்ட் /டேடா மேனேஜர் பணியிடத்திற்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமும், டேடா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்திற்கு மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும்.
MPHW- பணியிடத்திற்கு மாதம் ரூ. 6,500-ம், வேன் கிளீனர் பணியிடத்திற்கு ரூ.6,500 ம், செவிலியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000 சம்பளமும் வழங்கப்படுகிறது. ஓட்டுநர் பணியிடத்திற்கு ரு.13,500 வழங்கப்படுகிறது. லேப் டெக்னிஷியன் பணியிடத்திற்கு ரூ.8 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்: இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் ( Under taking) அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications