திருப்பூரில் அரசு பள்ளியில் வேலை.. 10ம் வகுப்பு முடிச்சவங்களுக்கும் ஜாப் இருக்கு! அப்ளை பண்ண ரெடியா?
சென்னை: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் செயல்படும் இந்த சைனிக் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் முதல் வார்டு பாய்ஸ் பணியிடங்கள் வரை நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ராணுவப் பணியில் சேர, மாணவர்களை தயார்ப் படுத்தும் நோக்கத்துடன் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த பள்ளிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. சைனிக் பள்ளியில் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் மற்றும் வழக்கமான முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. பிஜிடி இயற்பியல் (முதுகலை பட்டதாரி ஆசிரியர்) - 01
2. PGT- கணிதம் - 01
3. TGT- ஆங்கிலம் - 01
4. TGT- கணிதம் - 01
5. ஆய்வக உதவியாளர் (இயற்பியல்) - 01
6. Band மாஸ்டர் - 01
7. ஆலோசகர் - 01 பதவி
8. Art மாஸ்டர் - 01
9. மருத்துவ அதிகாரி - 01
10. கீழ்நிலை எழுத்தர் (LDC) - 01
11. PEM/PTI - மேட்ரன் (பெண்) - 01
12. வார்டு பாய்ஸ் - 02 என மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு துறை சார்ந்த பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் கற்று கொடுக்கும் திறன் அவசியம்.
* வார்டு பாய்ஸ் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தியில் உரையாடும் திறன் பெற்று இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
* லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்து இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி தகுதி பற்றிய மேலோட்டமான தகவல் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
21 வயது பூர்த்தியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு பணியிடத்திற்கு தகுந்தபடி மாறுபடும். அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
1. பிஜிடி இயற்பியல் - 8வது ஊதிய கமிஷன் படி சம்பளம் வழங்கப்படும்.
2. PGT- கணிதம் - மாதம் ரூ. 45,000 வழங்கப்படும்
3. TGT- ஆங்கிலம் - ரூ. 40,000
4. TGT- கணிதம் - ரூ. 40,000
5. ஆய்வக உதவியாளர் (இயற்பியல்) - ரூ. 25,000
6. Band மாஸ்டர் - ரூ. 40,000
7. ஆலோசகர் - ரூ. 35,000
8. Art மாஸ்டர் - ரூ. 25,000
9. மருத்துவ அதிகாரி - ரூ. 45,000
10. கீழ்நிலை எழுத்தர் (LDC) - ரூ.25,000
11. PEM/PTI - மேட்ரன் (பெண்) - ரூ.25,000
12. வார்டு பாய்ஸ் - ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்து தேர்வு நடைபெறும். தொடர்ந்து திறன் தேர்வு, இண்டர்வியூ மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆஃப்லைன் வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 26.04.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.05.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.sainikschoolamaravathinagar.edu.in/












Click it and Unblock the Notifications