தெற்கு ரயில்வேயில் வேலை.. 67 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. இதோ விவரம்!
சென்னை: தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு ஆகிய கல்வி தகுதிகளுடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு ஆகிய கல்வி தகுதிகளுடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 67 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: தடகளம், செஸ், பளு தூக்குதல், பேஸ்கட் பால், பாடி பில்டிங், பாக்சிங், கிரிக்கெட், கால்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஹாக்கி, வாட்டர் போலோ உள்ளிட்ட பிரிவு விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: லெவல்-1 விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். லெவல் 2/3 விளையாட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்து இருக்க வேண்டும். லெவல் 4/5 பிரிவுக்கு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
01.04.20222-க்கு பிறகு விளையாட்டில் சாதித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கான தகுதிகள் தேர்வு அறிவிப்பில் கொடுகப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பினை கிளிக் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை பார்த்து தெரிந்து கொண்ட பின்னர் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுருத்தப்படுகிறார்கள்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு வங்கி கட்டணங்கள் கழித்து ரூ.400 திரும்ப அளிக்கப்படும். பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க வரும் 06.10.2024- கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க : https://iroams.com/rrc_sr_sports2024/pdfs/RRCCRNOTIFICATION.pdf
தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://iroams.com/rrc_sr_sports2024/












Click it and Unblock the Notifications