ரெடியா.! தென்காசியில் வேலை.. சமூக நலத்துறை அறிவிப்பு.. பிளஸ் 2 முடிச்சவங்களுக்கும் ஜாப் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்காசி மாவட்டத்தில் ''சகி -ஒருங்கிணைந்த சேவை மையம்'' ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை பார்க்கலாம்.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கீழ் இயங்கும் "ஒன் ஸ்டாப் சென்டர்" திட்டத்தில் செயல்படும் சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட சமூக நல அலுவலர் வெளியிட்டுள்ளார்.

 Jobs in Tenkasi district, Recruitment in Sakhi – One Stop Centre Social Welfare Department Notification

அந்த அறிவிப்பில், வழக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய பணியிடத்திற்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்பட இதர தகுதிகளையும் சம்பள விவரங்கள் ஆகியவற்றையும் கீழே காணலாம்.

கல்வி தகுதி: வழக்கு பணியாளர், பாதுகாவலர் என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. வழக்கு பணியிடத்திற்கு சமூக பணி அல்லது உளவியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஒரு வருட அனுபவமும் பெற்றிருத்தல் அவசியம். பாதுகாவலர் பணியிடத்திற்கு பிளஸ் 2 முடித்து இருக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் (குறைந்தது ஒரு வருடம்) பெற்றிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்: பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?: இந்த இரு பணியிடங்களும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பாதுகாவலர் பணியிடத்திற்கு ரூ.10 ஆயிரம் மாத ஊதியமாக அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தென்காசி மாவட்ட இணையதளம் சென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள https://tenkasi.nic.in/notice_category/recruitment/ இணைப்பிற்கு செல்ல வேண்டும். அதில் பணியிடம் குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை சுய சான்று ஒப்பம் இட்டு சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, "மாவட்ட சமூகநல அலுவலகம், 86A, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தென்காசி" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 18.08.2023 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+