Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி.. 59,000 வரை சம்பளம்! 10 ஆம் வகுப்பு தகுதி தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவாரூர் நன்னிலம் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பயிற்றுவித்தல் (Non Teaching) அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஇ முடித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த பல்கலைக்கழகம் நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பபடுகின்றன.

job bank jobs employment

அந்த வகையில், தற்போது பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பயிற்றுவித்தல் (Non Teaching) அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு ஆகியவை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. தகவல் விஞ்ஞானி - 01 பணியிடம்
2. உதவி நூலகர் - 01
3. லோயர் டிவிஷன் கிளார்க் - 04
4. மல்டி டாஸ்கிங் ஊழியர் - 03
5. நூலக உதவியாளர் - 02
6. ஆய்வக உதவியாளர் - 01
7. விடுதி உதவியாளர் - 02
8. தணிக்கை அதிகாரி /ஆலோசகர் தணிக்கை (ஒப்பந்த அடிப்படை ) - 01

கல்வி தகுதி: பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். தகவல் விஞ்ஞானி பணியிடத்திற்கு பி.இ / பிடெக் (கணிணி அறிவியல்), ஐடி உள்ளிட்ட ஏதேனும் ஒரு படிப்பினை முடித்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி நூலகர் பணிக்கு நூலக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆவண அறிவியல் அல்லது அதற்கு நிகரான படிப்புகளை முடித்து இருக்க வேண்டும்.

55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்பிடிப்பு முடித்து இருந்தால் போதும். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அல்லது ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு: தகவல் விஞ்ஞானி மற்றும் உதவி நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தணிக்கை அதிகாரி பணிக்கு வயது உச்ச வரம்பு 65 ஆகும். இதர அனைத்து பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு 32. அரசு விதிகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை ஹாஸ்டல் உதவியாளர், நூலக உதவியாளர், மல்டி டாஸ்கிங் ஆகிய பணியிடங்களுக்கு பே லெவல் 1 படி ரூ.18,000 - 56,900 - வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.750 ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. cutnnt.samarth.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு, விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ் காணும் முகவரிக்கு தபால் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Joint Registrar,
Recruitment cell,
Central University of Tamil Nadu,
Neelakudi,
Thiruvarur - 610 005, Tamil Nadu.

தபால் வழியாக விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.11.2024-அகும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 02.10.2024. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024. தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://cutn.ac.in/wp-content/uploads/2024/10/Advt_Non_Teaching_Final_2024_01102024.pdf கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+