தமிழக போலீஸ் ரிப்போர்ட்டர் வேலை.. நேரடி நியமனம்.. +2 தகுதி தான்! செம சான்ஸ்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழக காவல்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. இரண்டாம் நிலை காவலர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் உரிய அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து வருகிறது.

சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழிற்கல்வி தேர்வில் ஆங்கிலம் தட்டச்சு ஹையர் / சீனியர் கிரேடு முடித்து இருக்க வேண்டும். பணி தொடர்பான சுருக்கெழுத்து அறிவும் அவசியம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்காலம். எம்பிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது 37- வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திறன் தேர்வை பொறுத்தவரை விண்ணப்பதாரரின் டைப்ரைட்டிங் திறனை அறிந்து கொள்வதாக இருக்கும். விண்ணப்பிக்க வரும் 15.04.2024 கடைசி நாளாகும். போதுமான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.36,200- 1,14,800- வரை வழங்கப்படும். பணியை பொறுத்தவரை அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் செய்யும் விதமாக இருக்கும்.
இரவு நேரத்திலும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். பணியின் தன்மை மற்றும் விண்ணப்பிகும் விவரங்கள், தேர்வு முறை குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf என்ற இணையதளத்தினை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications