இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. மாதம் 62 ஆயிரம் வரை சம்பளம்.. நோ எக்ஸாம்! எப்படி விண்ணப்பிப்பது?
தூத்துக்குடி: இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அலுவலகத்தில் காலியாக உள்ள 08 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. கோவில் நிர்வாக பணிகளில் ஏற்படும் பணியிடங்கள், துறையின் கீழ் உள்ள அலுவலகங்களில் ஏற்படும் பணியிடங்கள் போன்ற காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: டிரைவர் 04 , அலுவலக உதவியாளர் 04 என மொத்தம் 08 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடியிலேயே பணியில் அமர்த்தப்படுவாரக்ள்.
கல்வித்தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை டிரைவர் வேலைக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு: டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 32-வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எம்பிசி, பிசி, உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை டிரைவர் பணிக்கு மாதம் ரூ. 19,500 - 62,000 வரையும் அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,700 - 50,000 - வரையும் கிடைக்கும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு கிடையாது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்னப்பதாரர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 20. 03. 2024 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். தேர்வு அறிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை,
அழகேசபுரம், மெயின் ரோடு,
தூத்துக்குடி - 628 001.
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications