இந்து அறநிலைய துறையில் கிளார்க் வேலை! 10ஆம் வகுப்பு தகுதிதான்.. மாதம் 33,700 சம்பளம்! அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சியில் உள்ள அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை அறநிலையத்துறை செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணபிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: திருச்சி ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஒரு எழுத்தர் (கிளார்க்) பணியிடம் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும், 45 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 10,700 முதல் 33,700 வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது: நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் அதனுடன் ரூபாய் 25 மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 07.09.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவானைக்காவல், - 620005.
தொலைபேசி எண் : 04312230257.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications