ஊரக வளர்ச்சி துறையில் வேலை! நோ எக்ஸாம்.. 62 ஆயிரம் சம்பளம்.. 8ம் வகுப்பு தகுதி.. விண்ணப்பிக்க ரெடியா
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக அலுலக உதவியாளர் உள்பட 40 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பள விவரம் உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சிதுறையில் அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்டு கிளர்க் மற்றும் நைட் வாட்ச்மேன் என 40 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் ஆகிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: டி.என் பாளையம் பஞ்சாயத்து யூனியனில் அலுவலக உதவியாளர் (03), இரவு காவலர் (01). தளவாடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (01). சத்திய மங்கலம் பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியாளர் (02). பெருந்துரை பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியளர் (01), நம்பியார் பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியாளர் (03), மொடக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியாளர் (01), நைட் வாட்ச்மேன்(01),
கொடுமுடி பஞ்சாயத்து யூனியன்: ரெக்கார்டு கிளர்க் (01), அலுவலக உதவியாளர் (02), நைட் வாட்ச்மேன் (01). கோபிசெட்டிபாளையம் யூனியன்: அலுவலக உதவியாளர் (04), நைட் வாட்ச்மேன் (01), சென்னிமலை பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியாளர் (03), நைட் வாட்ச்மேன் (01). பவானிசாகர் பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியாளர் (03) ,ஜிப் டிரைவர் (01). அம்மாபேட்டை பஞ்சாயத்து யூனியன்: அலுவலக உதவியாளர் (01) என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஜீப் டிரைவர் பணிக்கு 8+டிரைவிங் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். நைட் வாட்ச்மேன் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினருக்கு 18 முதல் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. பிசி, எம்.பி.சி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. இது பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு? அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் 50 ஆயிரம் வரையும், ஜீப் டிரைவர் பணிக்கு ரூ.19,500 - 62 ஆயிரம் வரையும் சம்பளமாக வழங்கப்படும். நைட் வாட்ச்மேன் பணிக்கு ரூ.15,700 - 50,000 வரையும், ரெக்கார்டு கிளர்க் பணிக்கு ரூ.15,900 - 50,400 வரையும் சம்பளமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பங்களை பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பம் செய்யலாம். ஈரோடு மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள லிங்கை https://erode.nic.in/notice_category/recruitment/ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications