தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை.. 23 மாவட்டங்களில் ரெடியா.. மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கியில் (டிஎன்எஸ்சி வங்கி) வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி , TNSC வங்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு கூட்டுறவு வங்கி நிறுவனமாகும் . இது 1905 இல் நகர்ப்புற கூட்டுறவு வங்கியாக இணைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, TNSC வங்கிக்கு சென்னையில் மட்டும் 46 கிளைகள் உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.இதில் 23 பணியிடங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் ஒரு பணியிடம் டிஎன்எஸ்சி வங்கியிலும் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி: எம்பிஏ அல்லது அதற்கு சமமான படிப்பு, மார்க்கெட்டி மேனேஜ்மெண்ட், கோ ஆப்ரேட்டிவ் மேனேஜ்மெண்ட், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், ரூரல் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடங்களில் முதுக்கலைப் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் கல்வியை 10+2+3+2 அல்லது 10+2+4+2 என்ற வகையில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் 23 மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.25000 (நிலையானது) வழங்கப்படும்.

தமிழக கூட்டறவு வங்கியில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf9NeeGH9OzHKNQaVS33N--GrLAweW12jDIMyXc6OgNfDqfgw/viewform இந்த லிங்க் மூலம் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்-
தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கு வரச்சொல்லி அழைப்பு வரும். மேலும் விவரங்களுக்கு https://www.acstitnsc.in/careers/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதேநேரம் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள் பிஎடிஎப் பைல் மூலமாகவும் முழு தகவலை அறியலாம். மேலும் விவரங்களை அறிய 044-25302354 என்ற தொலைப்பேசி எண்ணில் அறியலாம்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications