Jobs: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! பிளஸ் 2 படித்திருந்தால் போதும்!
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம், நாடு முழுவதும் 394 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெக்னீஷியன், டிரேட் அப்ரண்டிஸ், மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள பைப்லைன் பிரிவுகளில் (குழாய் வழி பிரிவுகள்)இந்தப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நிரப்பப்படும் பணியிடங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் & இன்ஸ்ட்ரூமென்டேஷன்), டிரேட் அப்ரண்டிஸ் (அசிஸ்டென்ட்-ஹியூமன் ரிசோர்ஸ், அக்கவுண்டன்ட்), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (புதிய பயிற்சிப் பணியாளர்கள்) மற்றும் டொமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (திறனாய்வுச் சான்றிதழ் பெற்றவர்கள்).
மண்டல வாரியான காலியிட விவரங்களில், கிழக்கு மண்டலக் குழாய்வழிப் பிரிவுகளில் (பைப்லைன் பிரிவு) அஸ்ஸாம் (10), பீகார் (21), ஜார்க்கண்ட் (03), உத்தரப் பிரதேசம் (29), மேற்கு வங்கம் (38) ஆகிய மாநிலங்களும்; மேற்கு மண்டலக் குழாய்வழிப் பிரிவுகளில் குஜராத் (77), மத்தியப் பிரதேசம் (05), மகாராஷ்டிரா (12), ராஜஸ்தான் (42) ஆகிய மாநிலங்களும் அடங்கும்.
வடக்கு மண்டலக் குழாய்வழிப் பிரிவுகளில் டெல்லி (07), ஹரியானா (11), இமாச்சலப் பிரதேசம் (04), பஞ்சாப் (19), ராஜஸ்தான் (03), உத்தரப் பிரதேசம் (08), உத்தராகண்ட் (02) ஆகிய மாநிலங்களில் வாய்ப்புகள் உள்ளன. தென் மண்டலத்தில் ஆந்திரப் பிரதேசம் (02), கர்நாடகா (05), தமிழ்நாடு (33) ஆகிய மாநிலங்களுக்குப் பயிற்சிப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
தென்கிழக்கு மண்டலக் குழாய்வழிப் பிரிவுகளில் ஆந்திரப் பிரதேசம் (14), சத்தீஸ்கர் (05), ஜார்கண்ட் (02), ஒடிசா (37), தெலங்கானா (05) ஆகிய மாநிலங்களில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிப் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்குக் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 31.01.2026 அன்று 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்கள், OBC பிரிவினருக்கு 3 வருடங்கள், PwBD (பொது/EWS) பிரிவினருக்கு 10 வருடங்கள், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 வருடங்கள் மற்றும் PwBD (OBC) பிரிவினருக்கு 13 வருடங்கள் தளர்வுகள் உண்டு.
தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்களது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள். டிரேட் அப்ரண்டிஸ் (DEO) பிரிவுக்கு apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவுக்கு nats.education.gov.in/student_register.php என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பச் செயல்முறை பிப்ரவரி 28 முதல் தொடங்கி, பிப்ரவரி 10, 2026 அன்று முடிவடைகிறது. மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க, iocl.com/apprenticeships என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
குழாய் வழி பிரிவு எனப்படும் பைப்லைன் பிரிவு என்றால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கழிவுநீர், திரவங்கள் மற்றும் வாயுப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, நீண்ட தூரம் குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் அமைப்பாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications