மத்திய அரசின் FSSAIஇல் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைகள்.. இப்படி தான் அப்ளை செய்யணும்
சென்னை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருவது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம். முறையான சட்டங்களை வகுத்து மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஆணையத்தின் முக்கிய பணியாகும்.
Fssai எனப்படும் இந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் - 225
பணி: Food Analyst 4
Technical Office 125
Central Food Safety Officer (CFSO) 37
Assistant Manager (IT) 4
Assistant Manager 4
Assistant 33
Hindi Translator 1
Personal Assistant 19
IT Assistant 3
Junior Assistant 3
Assistant Director Admin & Finance 6
Assistant Director (Technical) 9
Deputy Manager 6
வயது வரம்பு - சில பணியிடங்களுக்கு 30, சில பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி - ஒவ்வொரு பணியிடத்திற்கும் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும்.
சில பணியிடத்திற்கு 2 அல்லது டிப்ளமோ படித்திருந்தால் போதும்.
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும்
விண்ணப்பக் கட்டணம் -SC / ST பிரிவினருக்கு ரூ 500. இதர பிரிவினருக்கு ரூ.1500/. விண்ணப்பக் கட்டணத்தை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க https://www.fssai.gov.in/என்ற தளத்திற்குச் சென்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலாமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி - நவம்பர் 7, 2021
கூடுதல் தகவல்களுக்கு
https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_04_Advt_02_10_2021.pdf
https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf












Click it and Unblock the Notifications