சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைகள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சியில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் 89 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படப்பட்டுள்ளது.
மொத்தம் 89 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் - 89
பணி வாரியாக:
மருத்துவ அலுவலர் - 2 காலியிடங்கள்
தகுதி - எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். மேலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணியில் பெயர்: மருத்துவ அலுவலர் - 3 காலியடங்கள்
தகுதி - எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். மேலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மருத்துவ அலுவலர் - 01
தகுதி - எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். மேலும், தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் -2
சுகாதார நிர்வாகவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிஏ படித்திருக்க வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 4
தகுதி : அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். அல்லது உளவியல், தொடர்பு துறையில் அனுபவம் தேவை.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் - 03
தகுதி - அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - 02
தகுதி - அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
மருந்தாளுனர் - 3
தகுதி - பி.பார்ம், டி பார்ம் படித்திருக்க வேண்டும்
ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் - 58
தகுதி - அறிவியல் பாடம் எடுத்து ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இவை தவிர TB சுகாதாரப் பார்வையாளர் (5 காலியிடங்கள்), கணினி இயக்குபவர் (1 காலியிடம்) உள்ளிட்ட பதவிகளை நிரப்புவது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க www.chennaicorporation.gov.in தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : திட்ட அலுவலர் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு, நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை -600012
கடைசி தேதி - நவம்பர் 29, 2021
கூடுதல் தகவல்களுக்கு
www.chennaicorporation.gov.in












Click it and Unblock the Notifications