Join Indian Army: இந்தியா ராணுவத்தில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு..கிருஷ்ணகிரியில் ஆள்சேர்ப்பு முகாம்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கோயம்புத்தூர் இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற 25.09.2026 முதல் 07.10.2026 வரை கிருஷ்ணகிரியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அக்னிவீர் கிளர்க், அக்னிவீர் ஜெனரல் டியூட்டி (அனைத்து படைப்பிரிவு), அக்னிவீர் தொழில்நுட்ப பிரிவு (அனைத்து படைப்பிரிவு), அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்காக இந்த ஆள்சேர்ப்பு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள நாடுகள் பாதுகாப்புக்காக அதிக நிதியை செலவிட்டு வருகின்றன இந்தியாவிலும் ராணுவத்தினருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியா ராணுவத்தில் தற்போது அக்னி வீர் என்ற திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Jobs Indian Army Agniveer

இணையவழி பொது நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அக்னிவீர் கிளர்க், அக்னிவீர் ஜெனரல் டியூட்டி (அனைத்து படைப்பிரிவு), அக்னிவீர் தொழில்நுட்ப பிரிவு (அனைத்து படைப்பிரிவு), அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 10-ம் வகுப்பு தேர்ச்சி (அனைத்து படைப்பிரிவு), அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஹவுஸ் கீப்பர் & மெஸ் கீப்பர்) (அனைத்து படைப்பிரிவு) மற்றும் அக்னிவீர் மகளிர் இராணுவக் காவலர் ஆகிய பதவிகளுக்கு கோயம்புத்தூரில் உள்ள இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில், கிருஷ்ணகிரியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் வருகின்ற 25.09.2026 முதல் 07.10.2026 வரை இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர். வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை. திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள, புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பித்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டவாறு அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் படிவங்களை கொண்டு வரவேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதளம் மற்றும் 042-22222022 என்ற கோயம்புத்தூரில் அமைந்துள்ள இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் .

ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (அஞ்சல் குறியீடு- 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+