சென்னையில் ஐஐடி கல்வி நிறுவனத்தில் வேலை.. என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் உயரிய கல்வி நிலையங்களில் ஒன்று மெட்ராஸ் ஐஐடி. கிண்டியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டபட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 03 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: 03 ஜூனியர் என்ஜினியர் பதவிகள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் படித்து முடித்து இருக்க வேண்டும். சிவில் என்ஜினியரிங் பிரிவை எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். எம்.டெக் (ocean, civil, coastal) பிரிவை எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு. அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ஜூனியர் என்ஜினியர் பதவிக்கு (JE) தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.21,500 வரை சம்பளமாக வழங்கப்படும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். முதலில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். செயல்பாடுகளை பொறுத்து ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்து தேர்வு/ திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆர்வமும் தகுதியும் இருக்கும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து அறிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம். https://careers.icsr.in/admin/upload-announcement/672c55cb2e475.pdf என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.11.2024 கடைசி நாள் ஆகும்.












Click it and Unblock the Notifications