ரெடியா? 8 முடித்தாலே போதும்.. சுகாதாரத்துறையில் வேலை.. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே பணி.. சூப்பர்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 படித்தவர்கள், டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலிப்பணியிடங்கள் எவ்வளவு?
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச்சங்கம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. மொத்தம் 11 பிரிவுகளில் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Urban Health Manager பணிக்கு ஒருவர், Auxiliary Nurse Midwifery பணிக்கு 2 பேர், Physiotherapist, CeMONC Security, Pain and Palliative Care Worker, Audometrician, Speech Therapist, Dental Assistant பணிக்கு தலா ஒருவர், Multipurpose Hospital Woker பணிக்கு 8 பேர், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர், ரோடியோகிராபர் பணிக்கு தலா 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
Urban Health Manager பணிக்கு எம்எஸ்சி நர்சிங், பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்து பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Auxiliary Nurse Midwifery பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்து மல்டிபர்பஸ் ஹெல்த் வொர்க்கர் பயிற்சி படிப்பை முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

கல்வி தகுதி என்ன?
Physiotherapist பணிக்கு இளங்கலை பிரிவில் பிசியோதெரபிஸ்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். CeMONC Security பணிக்கு 8 ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். Multipurpose Hospital Worker, Pain and Palliative Care Worker பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். Audiometrician பணிக்கு ஒரு ஆண்டு படிப்பான Diplomo in Hearing, Language and Speech படித்திருக்க வேண்டும். Speech Therapist பணிக்கு அந்த பிரிவில் Diplomo படிப்பையும், Dental Assistant பணிக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணிக்கு 3 மாத டெக்னிசீயன் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். ரேடியோகிராபர் பணிக்கு பிஎஸ்சி ரேடியோகிராபர் பணியை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
Urban Health Manager பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரம், Audiometrician பணிக்கு ரூ. 17,250, Speech Therapist பணிக்கு ரூ.17,000, Auxiliary Nurse Midwifery பணிக்கு ரூ.14 ஆயிரம், Dental Assistant பணிக்கு ரூ.13,800, ரேடியோகிராபர் பணிக்கு ரூ.13,300, Physiotherapist பணிக்கு ரூ.13 ஆயிரம், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணிக்கு ரூ.11,200, CeMONC Security, Pain and Palliative Care Worker, Multipurpose Hospital Worker பணிக்கு மாதம் ரூ.8,500,
வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது தான். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ‛‛உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், பெருங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி - 606 213'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணபங்களை நேரில் அல்லது விரைவு தபால், மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். விண்ணப்ப படவங்களை https://kallakurichi.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் 2023 ஜனவரி மாதம் 2ம் தேதி மாலை 5.45 மணிக்குள் குறித்த முகவரிக்கு சென்றடைய வேண்டும்.
பணி தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications