நோ எக்ஸாம்! மாதசம்பளம் ரூ.25,000 -ரூ.67,000.. அழைக்கும் சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ.. காரைக்குடியில் வேலை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐயில் நேர்க்காணல் முறையில் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.67,000 சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CSIR(இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம்) - CECRI (மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்) அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆள்தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின் படி மொத்தம் 13 காலியிடங்கள் நிரப்பபப்பட உள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II, சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தலா ஒருவர், ப்ராஜெக்ட் அசோசியேட் - I பணிக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.67 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். பணிவாரியாக பார்த்தால் ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் - II பணிக்கு மாதம் ரூ.67 ஆயிரம், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். மேலும் ப்ராஜெக்ட் அசோசியேட் - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு கெமிஸ்ட்ரி, கெமிக்கல் சயின்சஸ், கெமிக்கல் என்ஜினீயரிங், என்விரான்மென்டல் என்ஜினீயரிங், எனனர்ஜி என்ஜினீயரிங் பிரிவில் பிஎச்டி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு வேதியியல், இயற்பியல், நானோ சயின்சஸ், நானோ டெக்னாலஜி பிரிவில் பிஎச்டி முடித்திருக்க வேண்டம்.
ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கெமிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிகல் என்ஜினீயரிங், எம்எஸ்சி என்றால் கெமிஸ்ட்ரி, ஆர்க்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II, சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிடபிள்யூடி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் cecri.res.in இணையதளம் சென்று விண்ணப்ப படிவம் டவுன்லோட் செய்து நிரப்பி நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்றகலாம். நேர்க்காணல் என்பது செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் விபரம்: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II, சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் - I (எம்எஸ்சி முடித்தவர்கள்) பணிக்கான நேர்க்காணல் செப்டம்பர் 5ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. மாறாக ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I பணிக்கு பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்களுக்கான நேர்க்காணல் செப்டம்பர் 6ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.
முகவரி: நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் படிப்பு உள்பட பிற அசல், நகல் சான்றிதழ்கள், போட்டோ, மாஸ்க், சானிடைசர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். நேர்க்காணல் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CSIR - CECRI,,COLLEGE,ROAD, KARAIKUDIல் நடைபெற உள்ளது ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 04565-241219/218 என்ற எண்களை அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] எனும் மெயில் மூலம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications