8 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா.. நோ எக்ஸாம்! ரூ.34,000 சம்பளம்.. ஹெல்த் சொசைட்டியில் செம வேலை
கரூர்: கரூர் மாவட்ட ஹெல்த் சொசைட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, பணியிடங்கள் எத்தனை என்பன போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கரூர் மாவட்ட ஹெல்த் சொசைட்டியில் காலியாக உள்ள ஏ.என்.எம், லேப் டெக்னிஷியன், சித்தா மருத்துவ பணியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்: ஏ.என்.எம் (02 பணியிடங்கள்) லேப் டெக்னிஷியன் (02), மருத்துவ பணியாளர் 01, எஸ்.பி.எச்.ஐ டிடிபி (01), சித்தா மருத்துவ பணியாளர் (04), ஆயுர்வேத மெடிக்கல் ஆஃபிசர் (01), புரோகிராம் கம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அஸ்சிஸ்டண்ட் (01), டெண்டல் சர்ஜன் (02), டெண்டல் அசிஸ்ஸ்டன் (02), எம்.எம்.யூ கிளீனர் (01), மல்டி பர்ப்போஸ் சுகாதார பணியாளர் (ஆண் -04) MLHP (02) என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை ANM பணிக்கு அரசு அங்கீகாரம் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏ.என்.எம் பள்ளியில் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
லேப் டெக்னிஷியன் பணிக்கு MLT பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். SBHI டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியுடன் டைப் ரைட்டிங் தமிழ் & ஆங்கிலத்தில் முதுகலை டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஏஎன்எம் பணியிடம் முதல் லேப் டெக்னீசியன் என அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பானது 20 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு: ஏஎன்எம் பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ. 14,000 ஆகும். இதேபோல் லேப் டெக்னீசியன் பணிக்கு மாத சம்பளம் ரூ.13,000 ஆகும். மருத்துவமனை பணியாளர் பணிக்கு மாதம் ரூ. 8,500 சம்பளம் வழங்கப்படும். ஆயுர்வேத மெடிக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 23.12.2023 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2024 ஆகும்.
தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம், (District Health Society)
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம், கரூர் - 639007.
தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை https://karur.nic.in/notice_category/recruitment/ கிளிக் செய்யவும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications