எக்ஸாம் இல்லை.. கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பணி! பாதுகாவலர் மற்றும் தொலைநோக்கி ஆபரேட்டர் வேலை!
திண்டுக்கல்: கொடைக்கானல் சூரிய ஆய்வகம், பாதுகாவலர் மற்றும் தொலைநோக்கி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு நேர்காணல்களை நடத்தவுள்ளது. இடம்: இரு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வும் மேற்கண்ட தேதிகளில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தின் நிா்வாக அலுவலகத்தில் நடைபெறும். தகுதியும் ஆா்வமும் உள்ளவர்கள் தங்களுடைய அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் வெளிப்பணி முறையில் பணியமர்த்த தகுதியான விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இரண்டு பதவிகளுக்கான இந்த ஆட்சேர்ப்பு, ஆய்வகத்தின் நிர்வாக அலுவலகத்தில் நேர்காணல்கள் மூலம் நேரடியாக நடத்தப்படும்.

பாதுகாவலர் பணிக்கான நேர்காணல் 2026, ஏப்ரல் 27 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும். இப்பணிக்கான விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். வயது வரம்பு 40 வயதைத் தாண்டக்கூடாது.
தொலைநோக்கி இயக்குபவர் (உயர் திறன்) பணிக்கான நேர்காணல், 2026 மே 5 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும். இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து இயற்பியல்/வேதியியல்/கணிதம்/தகவல் தொழில்நுட்பம்/மின்னணுவியல் பாடங்களில் பிஎஸ்சி பட்டம் அல்லது /பி.சி.ஏ அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30 ஆண்டுகள்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கட்டாயச் சரிபார்ப்பிற்காக, நிர்வாக அலுவலகம், கொடைக்கானல் சூரிய ஆய்வகம், இந்திய வானியற்பியல் நிறுவனம், கொடைக்கானல் - 624 103 என்ற முகவரிக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வு செயல்பாட்டில் பங்கேற்பதற்கு பயணப்படி/தினப்படி எதுவும் வழங்கப்படாது. கூடுதல் விவரங்கள் அல்லது விளக்கங்களுக்கு, ஆர்வமுள்ளவர்கள் 9052087403 என்ற செல்பேசி எண்ணில் அல்லது ksoiiap06[at]gmail[dot]com என்ற மின்னஞ்சல் முகவரியில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications