இன்னும் 2 நாள் தான்.. 14,967 காலிப் பணியிடங்கள்! கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு!
சென்னை: மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான பெருமளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 4 வரை ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்க் விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்த அறிவிப்பில் உள்ளபடி, கேந்திரிய வித்யாலயாவில் 9,126 காலியிடங்களும், நவோதயா பள்ளிகளில் 5,841 காலியிடங்களும் உள்ளன. இதில் 13,008 பணியிடங்கள் PRT, TGT, PGT, முதல்வர், துணை முதல்வர், நூலகர் உள்ளிட்ட ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவை.
அடுத்ததாக 1,959 பணியிடங்கள் நிர்வாக அலுவலர், உதவி ஆணையர், நிதி அலுவலர், உதவி பிரிவு அலுவலர், பொறியாளர், மொழிபெயர்ப்பாளர், ஸ்டெனோ உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பிரிவுகளாகும்.

10ஆம் வகுப்பு முதல் டிகிரி, அதற்கு மேல் இருக்கும்படி தகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் KVS, NVS ஆகியவை போதுமான பணியாளர்கள் இல்லாததால், இந்த ஆண்டு 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியிடங்களில் முதலிடம் பெறுவது PGT, TGT, PRT பிரிவுகள். PGT பிரிவில் 2,996 காலியிடங்களும், TGT பிரிவில் 6,362 இடங்களும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான PRT பிரிவில் 3,365 இடங்களும் உள்ளன. இதனுடன் இசை, கலை, உடற்கல்வி, கணினி அறிவியல், சிறப்பு கல்வி போன்ற பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழிலும் சில பணியிடங்கள் இந்த அறிவிப்பில் செறிவாக இடம்பெற்றுள்ளன.
நிர்வாகப் பணியிடங்களில் உதவி ஆணையர், நிர்வாக அலுவலர், நிதி அலுவலர், உதவி பிரிவு அலுவலர், ஜூனியர்/சீனியர் செயலக உதவியாளர், ஸ்டெனோகிராபர், ஆய்வக உதவியாளர், MTS போன்ற பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன. சம்பளமும் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை பதவிக்கேற்ப வழங்கப்படும்.
வயது வரம்பில் மத்திய அரசு விதிகளின்படி தளர்வும் வழங்கப்படுகிறது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டு, OBC பிரிவினருக்கு 3 ஆண்டு, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு உள்ளது.
அனைத்து பணியிடங்களும் கணினி வழித் தேர்வு (CBT) மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கான தேர்வு அனுமதிச் சீட்டு டிசம்பர் மாதத்திலேயே வெளியாகும். தேர்வுகள் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வு கட்டணம் பதவியின் அடிப்படையில் மாறுபடுகிறது, முதல்வர் பணிக்கு ரூ.2300, ஆசிரியர் பணிக்கு ரூ.1500, ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.1200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் CBSE, KVS, NVS ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.gov.in, kvsangathan.nic.in, navodaya.gov.in ஆகியவற்றில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பிப்பதற்கு முன் கல்வி தகுதி, வயது வரம்பு, ஒதுக்கீடு ஆகியவற்றையும் கவனிப்பது அவசியம்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications