Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் என்ஜின் ஓட்டுநராக ஆக ஆசையா? 5 ஆயிரம் பணியிடங்கள்.. தேதி முடிய போகுது! உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வேயில் அஸ்சிஸ்டண்ட் லோகோ பைலட் எனப்படும் ALP -பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5,696 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரயில்வே. லட்சக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ள ரயிலிவேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது போட்டித்தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த அறிவிப்பு ஒன்றை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

 Last date reminder, RRB Recruitment Assistant Loco Pilot ALP Posts 5,696 vacancy, How to apply, details

அதன்படி, உதவி லோகோ பைலைட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ரெக்ரூமெண்ட் போர்டு எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பிஇ / பி.டெக் ஆகிய படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோ மொபைல் என் ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் என் ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்க்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட் / மெயின்டனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (ரேடியோ & டிவி), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (மோட்டார் வாகனம்), வயர்மேன், டிராக்டர் மெக்கானிக் மற்றும் டிராக்டர் மெக்கானிக் காயில் விண்டர், மெக்கானிக் (டீசல்), ஹீட் என்ஜின், டர்னர், மெஷினிஸ்ட், ஏசி& ஏர் கண்டிஷனிங் மெக்கானிக். ஆகிய பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான மற்றும் தெளிவான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 - 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். 5696 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

தேர்வு முறை: சிபிடி எனப்படும் கணிணி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை ரயில்வே வாரியத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி முன்னாள் வீரர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்கள் மற்றும் பொருதாளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் (EBC) ஆகியோருக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.02.2024 ஆகும். நாளை தான் கடைசி நாள். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+