அலுவலகத்திற்கு லேட்டா போனீங்க.. அவ்வளவுதான்! நாடு முழுக்க மத்திய அரசு அனுப்பிய.. முக்கிய மெசேஜ்
சென்னை: நாடு முழுக்க உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார் ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக உத்தரவு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பாக முக்கியமான வாய்மொழி உத்தரவு ஒன்றும் அனுப்பப்பட்டு உள்ளதாம். இதில் நேரம் தவறாமை மட்டுமின்றி வேறு சில முக்கிய எச்சரிக்கைகளும் இடம்பிடித்துள்ளது.
பணி இடத்தில் காலதாமதம் செய்யும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மையம் எச்சரித்துள்ளது. மேலும் வழக்கமாக தாமதமாக வருவதையும், அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே வெளியேறுவதையும் உயர் அதிகாரிகள், அலுவலக மேனேஜர்கள் தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை அமைப்பில் (AEBAS) பல ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யாமல் இருப்பதையும், சில ஊழியர்கள் தொடர்ந்து தாமதமாக வருவதையும் கவனித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை வழங்கும் மொபைல் ஃபோன் அடிப்படையிலான முக அங்கீகார அமைப்பைப் பயன்படுத்த பணியாளர் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும்.
எச்சரிக்கைகள் என்னென்ன?: இதில் நேரம் தவறாமை மட்டுமின்றி வேறு சில முக்கிய எச்சரிக்கைகளும் இடம்பிடித்துள்ளது.
அரசு துறையில் கொடுக்கப்பட்டுள்ள டிரெஸ் கோடில் வர வேண்டும்.
அடிக்கடி பர்மிஷன் போட கூடாது.
சில மணி நேர பர்மிஷன் பாதி நாள் விடுப்பாக கருத வேண்டும்.
நீண்ட பிரேக் எடுக்க கூடாது என்று விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
கடும் உத்தரவு: அனைத்து MDO களும் (அமைச்சகம்/துறை/அமைப்பு) வருகை அறிக்கைகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வழக்கமாக தாமதமாக வருகை தருவது மற்றும் அலுவலகத்திற்கு முன்கூட்டியே வெளியேறுவது ஆகியவை தீவிரமாகப் கண்காணிக்கப்பட வேண்டும். தற்போதைய விதிகளின் கீழ் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
அனைத்து மத்திய அரசு துறைகளின் ஊழியர்கள் தங்கள் வருகையை AEBAS எனப்படும் ஆதார் அடிப்படையிலான வருகை அட்டவணையை பயன்படுத்தி தவறாமல் குறிக்க வேண்டும். இதை மிஸ் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள MDO களின் அனைத்து HOD களும் தங்கள் ஊழியர்களுக்கு அலுவலக நேரம், தாமதமாக வருகை போன்ற விஷயங்களை சரியாக கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையை www.attendance.gov.in போர்ட்டலில் இருந்து தொடர்ந்து பதிவிறக்கம் செய்து, சரியான நேரத்திற்கு வர தவறியவர்களை அடையாளம் கண்டு ஆக்சன் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உள்ள விதிகளை மேற்கோள் காட்டி, தாமதமாக வருகை தரும் ஒவ்வொரு நாளுக்கும் அரை நாள் சாதாரண விடுப்பு (CL) கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஒரு மணிநேரம் வரை தாமதமாக வருகை தர 2 நாள் மட்டுமே ஒரு மாதத்தில் அனுமதி தர வேண்டும், ஒரு மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் வந்தால் அதை அரை நாள் விடுப்பாக கணக்கில் கொள்ள வேண்டும்.
இதை விடுப்பாக கணக்கில் கொள்வது மட்டுமின்றி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக னைத்து MDO களும் (அமைச்சகம்/துறை/அமைப்பு) வருகை அறிக்கைகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தாமதமாக வருவதைப் போலவே முன்கூட்டியே புறப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.
முன்கூட்டியே வெளியேறும் ஒவ்வொரு நாளுக்கும் அரை நாள் சாதாரண விடுப்பு (CL) கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications