எந்த டிகிரி படித்திருந்தாலும் ஓகே.. ரூ 60000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: நியூ தமிழ்நாடு அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசுக்குச் சொந்தமாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் என மொத்தம் நான்கு முக்கியமான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன.
அதில் மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் காலியாக உள்ள பணிகளை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

300 காலி இடங்கள்
மொத்தம் 300 பொது நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருப்பமுடையவர்கள் http://newindia.co.in/ என்ற தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - நிர்வாக அதிகாரி (பொது) 300

கல்வித் தகுதி
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பாடப்பிரிவில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது, டிகிரி முடித்த சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டும், அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு
மாத சம்பளம் - ரூ 32ஆயிரம் முதல் ரூ 62 ஆயிரம் வரை
வயது வரம்பு: ஏப்ரல் 1ஆம் தேதியின் படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசின் விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - 3 வகையான தேர்வுகள் (முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு)

விண்ணப்பிப்பது எப்படி
விண்ணப்பக் கட்டணம் - பொதுப்பிரிவினருக்கு ரூ 750. எஸ்சி, எஸ்டி பிரிவினர் & மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 100.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 21,2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=truef
விண்ணப்பிக்க
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications