டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு பொதுத்துறை நிறுவனம் Oil India.
நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் தற்போது பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு
மொத்த காலியிடங்கள் - 535
பணி வாரியாக:
Electrician - 38
Fitter - 144
Mechanic Motor Vehicle - 42
Machinist Trade - 13
Mechanic Diesel Trade - 97
Electronics Mechanic Trade - 40
Boiler Attendant - 08
Turner- 04
Draughtsman Civil Trade - 08
Instrument Mechanic Trade - 81
Science- 44
Surveyor- 05
Welder- 06
IT&ESM / ICTSM / IT - 05

கல்வித் தகுதி
கல்வித் தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். Science பணியிடம் நீங்கலாக மற்ற பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
Science பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பவம் - ரூ 26 ஆயிரம் முதல் ரூ 90 ஆயிரம் வரை
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரை.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்
தேர்வு செய்யும் முறை - ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் - ஆன்லைன் மூலம் ரூ 200 செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கும் விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 23, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.oil-india.com/Document/Career/Updated_Online_Advertisement_for_Technical_Posts.pdf
விண்ணப்பிக்க












Click it and Unblock the Notifications