எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்.ஐ.சி. எச்.எஃப்.எல் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

நாட்டின் முன்னணி நிறுவனமான எல்.ஐ.சி எச்.எஃப்.எல்- இல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 180 ஜூனியர் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை (6), கோயம்புத்தூர் (5), மதுரை (4), ஓசூர் (1), காஞ்சிபுரம் (1), காரைக்குடி (1), கரூர் (1), திருநெல்வேலி (1), திருப்பூர் (1) என 21 இடங்கள் உள்ளன.

lic job Employment chennai lic job

மேலும், கர்நாடகா (29), மகாராஷ்டிரா (25), தெலுங்கானா (24) உள்ளிட்ட பல மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க காலியிடங்கள் உள்ளன. முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

கல்வித் தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.04.2026 நிலவரப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்கும் மற்றும் பணிபுரியும் முழுமையான அறிவு அவசியம். கணினி திறன்கள், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 01.04.2026 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 02.04.1996 அன்றும் அதற்குப் பின்னரும், 01.04.2005 அன்றும் அதற்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் உண்டு: பட்டியல் இனத்தவர் (ST/SC) பிரிவினருக்கு 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC-NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள். மாற்றுத்திறனாளிகளுக்கு (PWD), பொதுப்பிரிவு 10, OBC 13, ST/SC 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நகர வகையின் அடிப்படையில் மாத ஊதியமாக ₹41,509 (முதல் வகை நகரங்களுக்கு), ₹39,909 (இரண்டாம் வகை நகரங்களுக்கு) மற்றும் ₹38,709 (மூன்றாம் வகை நகரங்களுக்கு) வழங்கப்படும்.

தேர்வு முறை

தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் ST/SC, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்கள் ₹800 ஆன்லைனில் செலுத்த வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கான தேர்வு ஜூன் 2026 முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதியுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.lichousing.com/ மூலம் ஏப்ரல் 16, 2026 முதல் ஏப்ரல் 30, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் விரிவான அறிவிப்பு, பொதுவான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்ப சமர்ப்பிப்பு இணைப்பு குறிப்பிட்ட தேதிகளில் முழுமையாகச் செயல்படும். பதிவு செய்தவர்களுக்கு, தேர்வு தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன், ஹால் டிக்கெட் பதிவிறக்க இணைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+