‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஆஃபிசுக்கு செல்ல வேண்டியது இல்லை.. பிரபல ஐடி நிறுவனம் வரும் நல்ல சான்ஸ்!
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான லிவென்டஸ் நிறுவனம் பல்வேறு சலுகைகளுடன் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்குகிறது. இந்நிலையில் தான் அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Liventus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர் ஜேபி நகர் 3வது பேஸ் பகுதியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் லிவென்டஸ் நிறுவனத்தில் டேட்டா என்ஜினீயர் பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் SQL, Cosmos, Python உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் டெக்னீக்கல் ஸ்பெஷிபிக்கேஷனுக்கு ஏற்ப டிரான்ஸ்லேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு டெக்னீக்கல் ரீதியிலான பிரச்சனைகளை தீர்க்கும் திறன் வைத்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் பணி தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு FinTech அனுபவம், Azure சான்றிதழ் இருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்டாகும். அதோடு டேட்டா என்ஜினியரிங் பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதோடு ஊழியர்களுக்கு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஸ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிரப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும். சந்தேகம் இருப்பின் 804124 9790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications