வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனம் தரும் நல்ல சான்ஸ்.. செம வாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Liventus-ல் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Liventus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூர் ஜேபி நகரில் செயல்பட்டு வருகிறது.

லிவென்டஸ்ஸை பொறுத்தவரை முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக உள்ளது. குறிப்பாக Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் தான் லிவென்டஸ் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் (என்ட்ரி லெவல்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' வாய்ப்பு வழங்கப்ட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எச்டிஎம்எல், JQuery, VB, C#, MS SQl server, T-SQl, ASP.NET மற்றும் அதனை சார்ந்த சர்வர் டெக்னாலஜியை தெரிந்து வைத்து .NET அப்ளிகேஷனில் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு யூஐ டிசைன், காமர்ஸ் சர்வர், கன்டென்ட் மேனஜ்மென்ட் உள்ளிட்டவை தெரிந்து வைத்திருந்தால் அது பிளஸ் பாயிண்டாக கருதப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் மைக்ரோசாப்ட் ASP.NET, .NET காம்போனன்ட்ஸ், வெப் சர்வீசஸ், என்டர்பிரைஸ் சர்வீசஸ் காம்போனன்ட்ஸ் உள்ளிட்டவற்றை டிசைன், டெவலப் மற்றும் Modify செய்வது, SQL database Schemas and Scripts மெயின்டென்ட் செய்வது தான் முதன்மை பணியாகும். இதுதவிர பிற பணிகளும் வழங்கப்படும்.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு நன்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டு டிகிரி முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் விண்ணப்பத்தாரர்கள் என்ஜினியரிங் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஸ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிர்ந்து அளிக்கப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும். இருப்பினும் கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரமும் தெரிவிக்கப்பவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications