ஜப்பான், ஜெர்மனி, நியூசிலாந்தில் வேலை பார்க்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
சென்னை: வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வாய்ப்புகளை அதிகபடுத்தியுள்ளது ஜப்பான், ஜெர்மனி, நியூசிலாந்து நாடுகள். இங்கு படிக்கவும் வேலை செய்யவும் விரும்பும் இந்திய மாணவர்களும், தொழில்நுட்ப நிபுணர்களும் இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு எளிதான வாய்ப்புகளை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். நல்ல சம்பளம், மேற்கத்திய கலாசாரத்துடன் கூடிய லைஃப் ஸ்டைல் உள்ளிட்டவை கொண்ட சூழலில் வேலை பார்க்க வேண்டும் நினைத்து பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என சொல்லும் அளவிற்கு வெளிநாட்டு வேலை கனவு பலருக்கும் இருக்கும்.

திறன் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு
வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே கை கழுத்துகளில் தங்க செயின்களில் வலம் வருவது போல நம்ம ஊர் சினிமாக்களில் கூட காட்சிகளை பார்த்து இருப்போம். அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்தாலே வசதியாக இருப்பார்கள் என்பதே பொதுவான ஒரு மனநிலையாக உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தற்போது திறன் பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாம். இதனை சரி கட்ட வெளிநாட்டில் திறமையான பணியாளர்களுக்காக தனது கதவுகளை திறந்துவிட்டுள்ளது. அதாவது, விசா கொள்கைகளை எளிமை படுத்துதல், கவரச்சிரமான பேக்கேஜ்கள் உள்ளிட்டவைகளை வெளியிட்டு ஸ்கில்டு வொர்க்கர்கஸ் எனபடும் திறன் பணியளர்களை இழுக்க ஆர்வம் காட்டி வருகிறது.
என்ஜினியரிங், ஐடி, ஹெல்த்கேர்..
தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சிகளை மேற்கூறிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஜெர்மனியை எடுத்துக்கொள்ளலாம். அந்த நாட்டில் தற்போது என்ஜினியரிங், ஐடி, ஹெல்த்கேர், மொபிலிட்டி டெக்னாலஜி, பசுமை எரிசக்தி துறை உள்ளிட்டவற்றில் திறன் வாய்ந்த நிபுணர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
எனவே இதற்கு தீர்வு காணும் விதமாக ஜெர்மனி தற்போது விசா விதிகளை எளிமைப்படுத்தியுள்ளது. அதேபோல, EU ப்ளூ கார்டிற்கான சம்பளத் தகுதி அளவுகளை குறைத்துள்ளது. விரைவான டிஜிட்டல் நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் திறன் மிக்கவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாய்ப்பு அட்டை (Opportunity Card) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
6 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன
ஜெர்மனியில் படிக்கவும் வேலை செய்யவும் விரும்பும் இந்திய மாணவர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு எளிதான வாய்ப்புகளை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. டெர்ன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினவ் நிகாம் இது தொடர்பாக கூறுகையில், "எங்கள் பணிகளில் நாங்கள் பார்த்தது என்னவென்றால், ஜெர்மனி தொழிலாளர் பிரச்சனை என்பது குறுகிய கால திறன் பற்றாக்குறை அல்ல.
அது ஒரு கட்டமைப்புசார்ந்த மாற்றம் ஆகும். கிட்டத்தட்ட 6 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இன்னும் பல லட்சம் பேர் ஓய்வு பெற இருக்கிறார்கள். அந்த நாடு அந்த நாடு தனது பொருளாதாரத்தின் தொழில்நுட்ப முதுகெலும்பை மறுவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது" என்றார்.
அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
இந்த நாடுகளை டார்கெட் செய்து வேலை தேடுபவர்கள், விசா விதிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி, தகுதி அளவுகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். இதற்கான வழிகாட்டுதல்களை வேலை தேடும் இளைஞர்களுக்கு அளிக்க அதிகார்ப்பூர்வ இணையதளங்கள் உள்ளன.
* ஜெர்மனி: make-it-in-germany.com
* இத்தாலி: globalcitizensolutions.com
* நியூசிலாந்து: jobs.govt.nz மற்றும் careers.govt.nz
* ஜப்பான்: GaijinPot, Daijob மற்றும் Japan Dev
எளிமையான வழிகாட்டி
வேலைவாய்ப்பு தேவை, விசா நடைமுறைகள், தகுதி அளவுகள் ஆகியவற்றை பற்றிய விரிவான தகவல்களை இந்த இணையதளங்கள் அளிக்கின்றன. இது வெளிநாட்டில் வேலை பெற திட்டமிடும் சர்வதேச தொழில்முனைவர்களுக்கு ஒரு எளிமையான வழிகாட்டியாக உள்ளது. திறன் மிக்க பணியாளர்களுக்கு சர்வதேச அளவில் டிமாண்ட் அதிகரித்து இருப்பதால், அதிகத் தேவை கொண்ட நாடுகளில் தங்கள் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்கு தற்போது மிகவும் உகந்த நேரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications