சென்னை உயர் நீதிமன்றத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை.. 115 காலியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்டம் வாரியாக 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்து மேலும் விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Madras High Court Jobs

பணியிடங்கள் விவரம்:

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் -115 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

மாவட்ட வாரியாக:

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு - 2
அரியலூர் - 1
செங்கல்பட்டு - 3
சென்னை - 11
கோவை - 4
கடலூர் - 2
தருமபுரி - 2
திண்டுக்கல் - 4
ஈரோடு - 2
கள்ளக்குறிச்சி - 4
காஞ்சிபுரம் - 3
கன்னியாகுமரி - 5
கரூர் - 1

மதுரை - 5
மயிலாடுதுறை - 1
நாகப்பட்டினம் - 2
நாமக்கல் - 1
நீலகிரி - 1
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் 1
சேலம் - 4 இடுகைகள்
சிவகங்கை - 1
தென்காசி - 2
தஞ்சாவூர் - 3
தேனி - 2

தூத்துக்குடி - 6
திருச்சிராப்பள்ளி - 5
திருநெல்வேலி - 5
திருப்பத்தூர் - 1
திருப்பூர் - 2
திருவள்ளூர் - 6
திருவண்ணாமலை - 4
திருவாரூர் - 4
வேலூர் - 3
விழுப்புரம் - 2
விருதுநகர் - 1
புதுச்சேரி - 6

கல்வித் தகுதி:

பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிஎஸ்சி (ஐடி), பிசிஏ, பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி டெக், எம்.சிஏ, எம்எஸ்சி, எம்இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்டெக், எம்.எஸ்.சி (ஐடி) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.09.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?:

சம்பளம்த்தை பொறுத்தவரை மாதம் ரூ.15,000 வழங்கப்படும். முற்றிலும் இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வு முறையை பொறுத்தவரை திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2026 முதல் 29.09.2026 ஆம் தேதி வரை விண்னப்பிக்கலாம்.

தேர்வு நடைபெறும் நாள் 10.10.2026/11.10.2026 ஆகும்.

நேர்முகத் தேர்வு (Viva voce) - 24.10.2026 / 25.10.2026 அன்று நடைபெறும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+