ஹைகோர்டில் கிளர்க் உள்பட 74 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு, டைப்பிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபர், ஜூனியர் கிரேட் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றங்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் வரும் நீதிமன்றங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு பிரிவு இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Madras High Court Recruitment 2024 74 Posts how to apply Check full details

பணியிடங்கள் விவரம்:

1. சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (குரூப்-பி பதவி) - 06
2. ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (குரூப்-சி பதவி) - 09
3. மொழிபெயர்ப்பாளர் / மொழிபெயர்ப்பாளர் (குரூப்-சி பதவி) - 02
4. ஜூனியர் கிளார்க் (குரூப்-சி பதவி) - 23
5. தட்டச்சர் (குரூப்-சி பதவி) - 13
6. டிரைவர் (குரூப்-சி பதவி) - 01
7. எம்.டிஎஸ் (பொது) (குரூப்-சி பதவி) - 20

என மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:
பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். உதாரணமாக ஸ்டெனோகிராபர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் இருந்து டைப்பிங் முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் கிளர்க் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டைப் ரைட்டிங் முடித்து இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எல்.எம்.வி ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். எ.டி.எஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 30 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எம்பிசி, ஒபிசி, இபிசி/பிடி/ பிசிஎம் ஆகிய பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி அரசின் வெளியிட்ட அரசாணையின் படி, அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள். புதுச்சேரியில் குடியிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் எவ்வளவு?:
1. சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் - ரூ.35,400
2. ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் - ரூ.25,500
3. மொழிபெயர்ப்பாளர் / மொழிபெயர்ப்பாளர் - ரூ.25,500
4. ஜூனியர் கிளார்க் - ரூ.19,900
5. தட்டச்சர் - ரூ.19,900
6. டிரைவர் - ரூ.19,900
7. எம்டிஎஸ் - ரூ.18,000

தேர்வு முறை:
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்வர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.04.2024 -ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.50%20of%202024%20Puducherry%20Judicial%20Subordinate%20Service.pdf இங்கே கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+