சென்னை ஹைகோர்ட்டில் டெக்னிக்கல் வேலை.. 75 பணியிடங்கள்.. 30,000 சம்பளம்.. தேதி முடிய போகுது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 டெக்னிக்கல் (VC HOST) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் (VC HOST)பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். பணியிடங்களை பொறுத்தவரை டெக்னிக்கல் (VC HOST) 75 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி: பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் என்ஜினியரிங், ஏஐ, மற்றும் மெஷின் லேர்னிங்க்), பிசிஏ, பி டெக்( ஐடி,) / எம்சிஏ, /எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்இ(கம்ப்யூடர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்), எம்டெக் (ஐடி)/ எம்எஸ் (ஐடி) ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து இருந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
சம்பளம் எவ்வளவு: ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வயது வரம்பை பொறுத்தவரை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 30,000 சம்பளம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications