மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் 127 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மதுரையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது போன்ற விவரங்களை இங்கு காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறப் பகுதிகளில் காலியாகவுள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான பெண் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் மதுரையில் 127 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Madurai Community Banking Facilitator Recruitment 2026 127 Vacancies Announced for Women SHG Members

தகுதிகள்

* ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.
* சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் ஊராட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
* 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

* அடிப்படை கணக்கீட்டு திறன் பெற்றிருக்க வேண்டும்.
* தகவல் தொடர்பு திறன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அனுபவம் இருக்க வேண்டும்.
* வாராக்கடன் உள்ள சுய உதவிக்குழுவின் உறுப்பினராக இருக்கக் கூடாது.
* தனியார் நிறுவனங்களில் முழுநேர பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

சிறப்பு தளர்வுகள்

* மலைப்பகுதிகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் பரிசீலிக்கப்படலாம்.
* பழங்குடியினர் பகுதிகளில் தகுதியான பெண் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் ஆண் உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படலாம்.

பணியின் முக்கிய பொறுப்புகள்

தேர்வு செய்யப்படும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பின்வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்:

1. சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வசதி ஏற்படுத்துதல்.
2. வாராக்கடன் தொகைகளை வசூலித்தல்.
3. நிதி கல்வி மற்றும் விழிப்புணர்வு வழங்குதல்.
4. காப்பீட்டு திட்ட சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
5. மின்னணு நிதி சேவைகள் மற்றும் தனிநபர் தொழில் கடன்களுக்கு வழிகாட்டுதல்.

தேர்வு முறை

* தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்
* மாவட்ட அளவிலான குழு தேர்வை நடத்தும்.
* எழுத்துத் தேர்வு - 75 மதிப்பெண்கள்
* நேர்முகத் தேர்வு - 25 மதிப்பெண்கள்

சம்பளம் எவ்வளவு?

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திலிருந்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு விடுவிக்கப்படும் மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம் ரூ.2500/-ஜ சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்கப்பட வேண்டும். இதுதவிர, காப்பீட்டு இழப்பீட்டு தொகை பெற்றுத்தருவதற்கான ஊக்கத்தொகை மற்றும் நிதி கல்வி முகாம் (FL Camp) நடத்துவதற்கான கூடுதல் மதிப்பூதியம் ஆகியவையும் வழங்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் தங்களது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் சுயகையொப்பமிட்ட நகல்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பபடிவத்தில் சுயகையொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 07.06.2026.

திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
புதுநத்தம், மதுரை - 625014.
(ரிசர்வ் லைன் பேருந்து நிலையம் அருகில்)

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://madurai.nic.in/notice_category/recruitment/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+