நல்ல சம்பளம்! ஐடி வேலை வேண்டுமா? மதுரையில் பணி செய்ய அசத்தலான வாய்ப்பு! அழைக்கும் எச்சிஎல்
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியான நிலையில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பணியை பெற நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் எச்சிஎல் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது டெக்னீக்கல் லீட் (Technical Lead) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டும், அதிகபட்சமாக 9 ஆண்டும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் PMO Operations கீழ் பில்லிங், ரிசோர்ஸ் ஆன்-போர்டிங் மற்றும் செயல்திட்டம் உருவாக்குவதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். நன்றாக உரையாடும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதோடு டீமில் உள்ளவர்களின் பணியை கண்காணித்து குறித்த நேரத்தில் பணியை முடித்து வழங்குவதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் முதலில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்படுவார்கள். அதன்பிறகு டெக்னீக்கல் இன்டர்வியூ, எச்ஆர் இன்டர்வியூ ஆகியவற்றுக்கு பணிக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பதும், தற்போதைய அறிவிப்பின்படி டெக்னீக்கல் லீட் பணிக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications