8ம் வகுப்பு, டிகிரி முடித்தாலே போதும்! மதுரை சட்ட சேவை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. மாதஊதியம் ரூ.20000

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது.

 Madurai Legal Aid Defense Counsel system recruitment for office Assistant and Data Entry operator

இந்த அமைப்பானது தமிழ்நாட்டில் சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது மதுரை மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட் /கிளர்க்(Office Assistant/Clerk), ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடுநிமிடத்துக்கு 40 எழுத்துகள் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

ரிசப்ஷன் கம் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்பண்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு, நல்ல உரையாடல் திறன் கொண்டிருக்க வேண்டும். டெலிபோன், பேக்ஸ் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதோடு டைப்பிங் திறமையும் இருக்க வேண்டும். ஆபிஸ் பியூன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தாங்கள் பணியாற்றும் நகரை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க், ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஆபிஸ் பியூன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது படிப்பு சான்றிதழ்களுடன், பிற ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை The Chairman/Principla District Judge, District Legal Services Autority, ADR Building, district Court Campus, Madurai 625 020 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் செசன்ஸ் நீதிபதியின் தலைமையிலான குழுவினரால் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின்படி ஆபிஸ் அசிஸ்டென்ட்ஸ்/கிளர்க் பணிக்கு 3 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா 2 பேர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 ஆண்டுகள் வரை பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு செயல்பாட்டை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.

பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+