மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை.. சுகாதாரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: மயிலாடுதுறை (Mayiladuthurai job) மாவட்டத்தில் காலியாக உள்ள செவிலியர், மருத்துவ உதவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.23,500 வரை வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
Psychiatric செவிலியர் - 01
மருத்துவ உளவியலாளர் - 01
மனநல சமூக சேவகர் - 01
தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் - ஜூனியர் உதவியாளர் - 01
பல்நோக்கு சுகாதார பணியாளர் - 01
டிஸ்பென்சர்/மருந்தாளர் (ஆயுஷ்) - 05
ரேடியோகிராஃபர் - 01
பணியாளர் செவிலியர் - 08
பிசியோதெரபிஸ்ட் - 01 என மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித்தகுதி மாறுபடும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரேடியோகிராபர் பணிக்கு சிஆர்.ஏ, பிஎஸ்சி ரேடியாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஸ்டாப் நர்ஸ் பணிக்கு பிஎஸ்சி நர்சிங் முடித்து இருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
* Psychiatric செவிலியர் - ரூ.18,000/-
* மருத்துவ உளவியலாளர் - ரூ.23,800/-
* மனநல சமூக சேவகர் - ரூ.23,800/-
* டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - ஜூனியர் அசிஸ்டென்ட் - ரூ.13,500/-
* பல்நோக்கு சுகாதார பணியாளர் - ரூ.8,500/-
* டிஸ்பென்சர்/மருந்தாளர் (ஆயுஷ்) - ரூ.15,000/-
* ரேடியோகிராஃபர் - ரூ.15,000/-
* பணியாளர் செவிலியர் - ரூ.18,000/-
* பிசியோதெரபிஸ்ட் - ரூ.15,000/-
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை https://mayiladuthurai.nic.in/. என்ற இணையதளத்தில் சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 09.03.2026 கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
District Health Society (DHS),
District Health Office,
Seventh Floor,
District Collectorate Campus,
Manampandal, Mayiladuthurai,
Pin Code - 609305.
தேர்வுஅறிவிப்பினை படிக்க: https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2026/02/17718401397352.pdf
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications