Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க 1,358 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளமாக ரூ.56 ஆயிரம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC), நாடு முழுவதும் உள்ள 1358 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜெனரல் மருத்துவ அலுவலர்கள், உதவி கோட்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஜெனரல் மருத்துவ அலுவலர்கள் நிலை-II போன்ற முக்கியப் பதவிகள் இதில் அடங்கும்.

MBBS Job Central Government Medical Officer Jobs UPSC Announces 1 358 Vacancies MBBS Graduates Can Apply

காலிப்பணியிடங்கள் விவரம்:

மத்திய சுகாதார சேவையின் ஜெனரல் மருத்துவ அலுவலர்கள் (MO) துணைப்பிரிவில் 864 இடங்களும், இந்திய ரயில்வேயில் உதவி கோட்ட மருத்துவ அலுவலர்களுக்கு (ADMO) 450 இடங்களும் உள்ளன.

டெல்லி மாநகராட்சியில் உள்ள ஜெனரல் மருத்துவ அலுவலர்களுக்கு (GDMO) 14 காலிப்பணியிடங்களும், டெல்லி மாநகராட்சியில் உள்ள ஜெனரல் மருத்துவ அலுவலர்கள் நிலை-II பிரிவுக்கு 30 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,358 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாடு இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.

கல்வித் தகுதி:

எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (எழுத்து மற்றும் செய்முறைப் பகுதிகள் இரண்டும்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

2026 ஆகஸ்ட் 1 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 1994 ஆகஸ்ட் 2-க்கு முன் பிறந்திருக்கக் கூடாது. அரசு விதிமுறைகளின்படி, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்த தளர்வுகளில், பட்டியலின வகுப்பினருக்கு (SC/ST) 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - NCL) 3 ஆண்டுகளும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுப் பிரிவில் 10 ஆண்டுகள், OBC பிரிவில் 13 ஆண்டுகள், SC/ST பிரிவில் 15 ஆண்டுகள் என தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix நிலை 10-ல், குறைந்தபட்சமாக ரூ.56,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆளுமைத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் பெண்கள், பட்டியலினத்தவர் (SC/ST) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகியோருக்கு இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஆன்லைன் முறையில் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், 2026 மார்ச் 11 முதல் - 2026 மார்ச் 31 வரை , UPSC வலைத்தளத்தின் 'Careers' என்ற பிரிவின் வழியாக தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள், தேர்வு நடைபெறுவதற்கு சுமார் 4 முதல் 7 நாட்களுக்கு முன்னர், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முன், UPSC CMS மருத்துவ அலுவலர் 2026 அறிவிப்பை முழுவதும் படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+