Remote முறையில் வேலை.. அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி.. McAfee நிறுவனம் தரும் வாய்ப்பு
சென்னை: McAfee நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன? தகுதிகள் வேண்டும் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்..
McAfee.. ஐடி உள்பட பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுக்கு டேட்டா பாதுகாப்புக்கான Anti Virus உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வரும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் கிளை பெங்களூரிலும் உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் McAfee நிறுவனத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
McAfee நிறுவனத்தில் தற்போது .Net Core With Golang Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு AWS உடன் Dotnet Core அல்லது Golang அல்லது Node.js உள்ளிட்டவற்றில் 3 முதல் 7 ஆண்டுக்கான ப்ரோகிராமங்கிங் ஸ்கில்ஸ் கொண்டிருக்க வேண்டும். மேலும் எஸ்க்யூஎல் டிபி (SQL DB)யின் MSSQL, MYSQl, PostgreSQl உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஜாவா ஸ்கிரிப்ட், எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ் 3 உள்ளிட்டவற்றின் ப்ரண்ட்-எண்ட் டெக்னாலஜிஸ் பற்றிய புரிதல் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Code Versioning Toolsகளான Git, Accurevl தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் Git, Accurev பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கோடர் ரிவ்யூ, டெஸ்ட்டிங், கன்டினியஸ் இன்டிகிரேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களுடன் ஆங்கிலத்தில் பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும். மேலும் Docker, Kubernetes டெக்ஜாலஜிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான மாதசம்பளம் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இருப்பினும் நிறுவனம் சார்பில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போனஸ், பென்ஷன் மற்றும் ஓய்வூதிய திட்டம், மெடிக்கல், டென்டல் மற்றும் கண்சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவ உதவிகள், Paid Time Off, சம்பளத்துடன் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அலுவலகம் செல்ல வேண்டாம். இருப்பினும் பணி குறித்த அப்டேட்டுகளை பெங்களூரில் உள்ள மெக்கஃபி நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை முன்கூட்டியே McAfee இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணிக்கான விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். .
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications