வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. அழைக்கும் McAfee.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலமான McAfee நிறுவனத்தில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதி உள்பட முழுவிபரங்களை இங்கே பார்ப்போம்.

ஐடி உள்பட பல்வேறு முக்கிய தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு வெவ்வேறு வகையான சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் McAfee. இந்த நிறுவனம் என்பது Anti Virus உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் பெங்களூரில் இயங்கி வரும் மெக்காஃபி நிறுவனத்துக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

McAfee நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் இன் டெஸ்ட்(Software Development Engineer in Test) (Pricing And Recommendation) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் சாப்ட்வேர் க்யூஏ அல்லது எஸ்டிஇடி-யில் (Software QA or SDET) பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஜாவா தெரிந்திருப்பதோடு ஆப்ஜெக்ட் ஒரியன்டட் ப்ரோகிராமிங் மற்றும் டெஸ்ட் ஆட்டோமேஷன் ப்ரேம்வொர்க்ஸில் அனுபவம் இருக்க வேண்டும்.

இதுதவிர ஆட்டோமெட்டட் டெஸ்ட்டிங் டூல்ஸ்/ப்ரேம்வொர்க்ஸ்களான செலினியம் (Selenium), வெப்டிரைவர் (WebDriver), டெஸ்ட்என்ஜி (TestNG), ரெஸ்ட் அசூர்ட் (REST Assured) உள்ளிட்டவற்றில் ஜென்கின்ஸ் (Jenkins) மற்றும் டெஸ்ட்டிங்க்கிற்கான செலினியம் கிரிட்டில் (Selenium Grid for continuous testing) அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சிஐ/சிடி, ஜென்கின்ஸ் அல்லது அதேமாதிரியான டூல்ஸ் மற்றும் RESTful APIs, மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ட்ச்சர் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் AWS, Azure அல்லது GCP உள்ளிட்டவற்றில் அனுபவம் பெற்றிருப்பதோடு, ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதோடு, அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அலுவலகம் செல்ல வேண்டாம். இருப்பினும் பணி குறித்த அப்டேட்டுகளை பெங்களூரில் உள்ள மெக்கஃபீ நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த பணிக்கான மாதசம்பளம் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இருப்பினும் நிறுவனம் சார்பில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போனஸ், பென்ஷன் மற்றும் ஓய்வூதிய திட்டம், மெடிக்கல், டென்டல் மற்றும் கண்சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவ உதவிகள், Paid Time Off, சம்பளத்துடன் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை முன்கூட்டியே McAfee இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணிக்கான விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். .

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+