மத்திய உளவுத்துறையில் வேலை.. ரூ.1,42,000 வரை சம்பளம்! 226 பணியிடங்கள்! கல்வி தகுதி என்ன? முழு விவரம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறையில் (IB) காலியாக உள்ள 226 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த தெளிவான விவரங்களை பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உளவுத்துறையில் காலியாக இருக்கும் டெக்னிக்கல் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வி தகுதி வயது, வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கணினி அறிவியல் & தகவல் தொழில்நுட்பம் - 79 பணியிடங்கள், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் - 147 பணியிடங்கள் என மொத்தம் 226 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: எலக்ட்ரானிக் & கம்யூனிகேஷன் கேட் ( GATE code: EC , CS 2021,2022 அல்லது 2023) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் & தகவல் தொழில் நுட்பம் ஆகிய இன்ஜினியரிங் பிரிவில் உயர் படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தகுதியான கட் ஆஃப் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பிஇ அல்லது பிடெக் முடித்து இருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை டிகிரி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விரிவான மற்றும் தெளிவான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 27 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கும் 3 ஆண்டுகளும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ரூ.44,900 - 1,42,000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: கேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 1 பதவிக்கு 10 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mha.gov.in என்ற உள்துறை அமைச்சகத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைமுறை கட்டணமாக ரூ.100 கட்டணம் விண்ணப்பிக்கும் அனைவரும் செலுத்த வேண்டும். அதுபோக பொதுப்பிரிவு மற்றும் ஒபிசி EWS பிரிவினர் தேர்வுக் கட்டணமாக கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 12-1-2024- கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிகும் முன்பாக தேர்வு குறித்த அறிவிப்பினை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பை படிக்க https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1114316788537372830543.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications